Posts

நீங்களே பாருங்க இந்த கருப்பு மஞ்சள் செய்யும் அதிசயத்தை

             சி த்த மருத்துவத்தில் கருப்பாக உள்ள மூலிகைகளை, உயர்வாகப் போற்றுகிறார்கள், கருந்துளசி, கருநெல்லி, கருநொச்சி போன்ற மூலிகைகள், காயகற்ப மூலிகைகளைப்போல, அளவற்ற நன்மைகள் தருமென்கிறார்கள். அதுபோல, ஒரு அரிய மூலிகைதான், குர்குமா எருஜினோசா எனும் கருமஞ்சள். அடர்ந்த காடுகள் மற்றும் மலைகளில் அரிதாகக் காணப்படும் கருமஞ்சள் செடி, இரண்டு மீட்டர்வரை வளரும், இந்தச்செடியின் வேர்க்கிழங்குகள் மருத்துவ குணமிக்கவை. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் கருமஞ்சள் இலைகளின் அடுக்குகளில் வசீகரமாகக் காணப்படும் சிவந்த மலர்களால், இச்செடிகள், சில இடங்களில் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன. கேரளத்தில் அதிகம் விளையும் இச்செடி, வட இந்தியாவில், ஆன்மீகரீதியாக, உடல் பாதிப்புகள், வேலையின்மை மற்றும் தொழில் பாதிப்புகளுக்கு, சிறந்த தீர்வு தருவதாகப் போற்றப்படுகிறது. கருமஞ்சள் வேர்க்கிழங்குகளை சுவைக்க கசப்பாக இருந்தாலும், அவற்றினால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். ஊட்டச்சத்துக்கள் கருமஞ்சளில், வேதி எண்ணை, மாவுச்சத்து, தாதுக்கள், கொழுப்பு, பசை, ரென்மின், ஜெர்மாக்ரின் கார்டியோன், ஆல்கலாயிடுகள்,

வீட்டு தோட்டம் அமைப்பது எப்படி

வீடு என்பது வெறுமனே கட்டடம் மட்டுமல்ல. ஆரோக்கியமான சூழலும் மனிதர்கள் ஒன்றுகூடி வசிக்குமிடமுமாகும். ஆரோக்கியம் என்றாலே அதற்கு செடி கொடிகள் மரங்கள் போன்றவை அவசியம் தானே. நமக்கு முந்தைய தலைமுறையினர் வரை வீடு என்பது மனிதர்கள், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகள் அதனுடன் வீட்டைச்சுற்றி வீட்டிலுள்ளவர்களுக்கு தேவையான செடி, கொடிகளும் கட்டாயம் இருந்தது இன்றோ இந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது. மண் தரைகளே இல்லாது அடுக்கிவைத்த வத்திப்பெட்டி போன்ற நவ நாகரீக வீடுகள்.. செருப்பைக்கூட சுதந்திரமாக கழட்ட முடியாத நிலைக்கு வாசல்.. போன் செய்தால் வீட்டிற்கே வரும் உணவு.. பின் ஆரோக்கியம் எங்கிருக்கும். இந்நிலையில் செடி வளர்ப்பதும், அதற்கு தண்ணீர் ஊற்றி பராமரித்து சில மாதத்திற்குப் பின் கிடைக்கும் சொற்ப விஷயங்களுக்காக வீணாக நேரத்தையும், நிலத்தையும் விரையம் செய்ய முடியுமா? இதெல்லாம் இன்று சாத்தியமா? கைபேசியும் கையும் இணைந்தே இருக்கும் இந்த காலத்தில் மண்ணும் செடியும் நினைக்கவே வேடிக்கையாகவும், புதிதாகவும் தான் இருக்கும். ஆனால், ஆரோக்கியமும் உணவும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. உணவிற்கு ஆதாரமே செடி கொடிகளு

வீட்டில் தோட்டம் அமைப்பது எப்படி?

ஜீரோ பட்ஜெட் தோட்டம் - உங்கள் மாடித் தோட்டத்திற்கு உரமும் வேண்டும். சுற்றுச் சூழலுக்கு உதவியும் செய்ய வேண்டும். ஒரே கல்லில் இந்த இரண்டு மாங்காயையும் அடிக்க முடியும் தெரியுமா. உங்கள் வீட்டு சமையலறை கழிவுகளையே மாடித் தோட்ட செடிகளுக்கு உரமாக மாற்ற முடியும். - முதலில் தயார் செய்ய வேண்டியது சமையலறையில் இரண்டு குப்பைத் தொட்டி. ஒன்று மக்காத குப்பை. வேறு வழியே இல்லை, அதைக் குப்பைத் தொட்டியில் கொட்டியாக வேண்டும். இரண்டாவது, மக்கும் குப்பை. அவற்றை சேகரித்து, மக்கிப் போகும் வரை பல்வேறு தொட்டிகளில் சேமித்து வைத்து உரமாகப் பயன்படுத்தலாம். மீன் கழிவைக்கூட பிளாஸ்டிக் தொட்டியில் வெல்லம் சேர்த்து வைக்கும் போது நாற்றமே இல்லாத தேன் போன்ற உரமாக மாறிவிடும். மண்ணுக்கு ஆக்ஸிஜனும் ஈரப் பதமும் இருக்கும்போதுதான் கம்போஸ்டிங் நடக்கும் என்பதால் அதை மட்டும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.  - இத்தகைய கம்போஸ்டிங் முறைகளைத் தெரிந்துகொள்வது மூலம் ஒரு பைசா செலவில்லாமல் வீட்டுத் தோட்டத்திற்கு உரம் சேர்க்கலாம். எங்கு விதைகள் கிடைக்கும்... - மாடித் தோட்டம் உருவாக்குவதற்குத் தேவையான பொருட்களை வெறும் `300க்கு வழங்குகிறது தமிழக